LATEST NEWS
அப்பாடா..! இன்னும் இரண்டு நாட்களில்.. MLA வி.எஸ் பாபு குறித்து மருத்துவர்கள் சொன்ன தகவல்…!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவரைச் சந்திப்பதற்கு முன்பாக, அங்குள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்களுடன் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினார். பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்தும், அவரை நேரில் சந்திப்பதால் ஏதேனும் தொற்று பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்தும் மருத்துவர்களிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
முதலமைச்சரின் கேள்விகளுக்குப் பதிலளித்த மருத்துவர்கள், தாராளமாக அவரை நேரில் சந்தித்துப் பேசலாம் என்று உறுதியளித்தனர். மேலும், வி.எஸ். பாபுவின் உடல்நலம் சீராகத் தேறி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவர்கள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனையை அடுத்தே முதலமைச்சர் விஜய், வி.எஸ். பாபுவை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
