LATEST NEWS
“இதில் பெரிய சிக்கல் இருக்கு…” முதலமைச்சரிடம் நேரில் முறையிட்ட விவேக் மனைவி.. உடனே கிடைத்த மாஸ் பதில்..!!
ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் இலக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கிரீன் கலாம்’ திட்டம் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மனைவி அருட்செல்வி இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவேக்கின் கனவுத் திட்டமான ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசித்ததாகக் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 33.8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அருட்செல்வி, தற்போது மரக்கன்றுகளை நடுவதற்குப் போதிய இடப்பற்றாக்குறை பெரும் சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து முதலமைச்சரிடம் முறையிட்டதாகவும், அதற்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்ததாகவும் அருட்செல்வி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
