கழுத்தில் துளையிட்டு MLA வி.எஸ். பாபுவுக்குக் தீவிர சிகிச்சை – மருத்துவமனையில் என்ன நடக்கிறது.? வெளியான பரபரப்பு தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கழுத்தில் துளையிட்டு MLA வி.எஸ். பாபுவுக்குக் தீவிர சிகிச்சை – மருத்துவமனையில் என்ன நடக்கிறது.? வெளியான பரபரப்பு தகவல்..!!

Published

on

கொளத்தூர் MLA வி.எஸ். பாபு அவர்களுக்குச் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த சில நாட்களாக செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், அவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவர்கள் அடுத்தகட்ட சிகிச்சை முறையை மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது அவரது கழுத்தின் முன்பகுதியில் சிறிய துளையிட்டு ‘ட்ரக்கியோஸ்டமி’ என்னும் முறையில் சுவாசம் அளிப்பதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை தற்போதைய சிகிச்சைக்குப் பிறகு எவ்வாறு உள்ளது என்பது குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in