MLA வி.எஸ். பாபுவுக்கு “அடுத்த 6 மணிநேரம் மிக முக்கியம்”… மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

MLA வி.எஸ். பாபுவுக்கு “அடுத்த 6 மணிநேரம் மிக முக்கியம்”… மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. பெரும் பரபரப்பு..!!

Published

on

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ். பாபுவிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில், அடுத்த 6 மணிநேரம் மிகவும் முக்கியமான காலகட்டம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகத் தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்கவும், உடலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றவும் கழுத்தில் பிரத்யேகக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகளைச் சீராக வைத்திருக்க ECMO (எக்மோ) கருவியின் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement

மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதால், சிகிச்சையின் முன்னேற்றம் குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in