LATEST NEWS
“அமைச்சர்கள் பேங்க் அக்கவுண்ட்டை சிஎம் பார்க்குறாரு..!” மேடையில் புஸ்ஸி ஆனந்த் போட்ட மெகா குண்டு.. அதிரும் அரசியல் களம்..!!
தமிழகத்தில் த.வெ.க அரசில் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகளை முதலமைச்சர் நேரடியாகவும் உளவுத்துறை மூலமாகவும் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் ‘புஸ்ஸி’ என்.ஆனந்த் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், தங்கள் ஆட்சியில் ஊழலுக்கோ அல்லது அதிகார துஷ்பிரயோகத்திற்கோ எள்ளளவும் இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாரபட்சமின்றியும், எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் எந்தவித தாட்சண்யமும் இன்றியும் அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்த புகார்கள் அவ்வப்போது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், அமைச்சரவையில் உள்ள சக உறுப்பினர்களின் நிதிப் பரிவர்த்தனைகளை முதல்வரே கண்காணிப்பதாக ஆளுங்கட்சி அமைச்சரே வெளிப்படையாகப் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போக்கு நிர்வாக சீர்திருத்தத்திற்கும் வெளிப்படைத்தன்மைக்கும் வழிவகுக்கும் ஒரு நல்ல நடவடிக்கை என ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், ஆளுங்கட்சிக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
