“காவலரா..? இல்லை ரவுடியா..?” வாலிபரை நடுரோட்டில் தரதரவென இழுத்து பிஆர்டி காவலர் செய்த பகீர் காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காவலரா..? இல்லை ரவுடியா..?” வாலிபரை நடுரோட்டில் தரதரவென இழுத்து பிஆர்டி காவலர் செய்த பகீர் காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தின் சர்தார் கோத்வாலி காவல் நிலையத்திற்கு முன்பாக, வாகனச் சோதனையின் போது பிஆர்டி காவலர் ஒருவர் அராஜகத்தில் ஈடுபட்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித் தற்போது தீயாய் பரவி வருகிறது. டிராஃபிக் போலீஸார் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் முன்னிலையிலேயே, அந்தப் பிஆர்டி காவலர் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரைப் பொதுமக்களுக்கு நடுவே மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தப் பகுதியில், சட்ட ஒழுங்கைக் கையில் எடுத்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட அந்தப் பிஆர்டி காவலர், தாக்கப்பட்ட இளைஞரை நடுரோட்டிலேயே வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று காவல் நிலையத்திற்குள் அடைத்துள்ளார். அங்கிருந்த பிற காவலர்கள் இந்தத் தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே அரங்கேறிய இந்த அத்துமீறல் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிஆர்டி காவலர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in