LATEST NEWS
“மகனே..! அப்பா எங்கேன்னு கேட்காதேடா…” புற்றுநோய் தந்தையின் கடைசி வார்த்தைகள்.. நெட்டிசன்களைக் கலங்க வைத்த வீடியோ..!!
கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிலிருந்த ஒரு தந்தை, தனது ஆயுள் முடிவதற்கு முன் தன் அன்பு மகன் மந்திராவிற்கு நெஞ்சை உருக்கும் இறுதி வார்த்தைகளை விட்டுச் சென்றுள்ளார். “மந்திரா, நான் எங்காவது சென்றுவிட்டால், அம்மா சொல்வதைக் கேட்டு நட. உன் அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொள். அப்பா எங்கே என்று கேட்காதே. உன் இரண்டு சகோதரிகளையும் கவனமாகப் பார்த்துக்கொள். என்னைப்போன்ற நினைவுகள் உனக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் நான் உன்னைச் சுற்றியே இருப்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Before passing away from terminal cancer, he left these final words for his son, Mantra:
Mantra, if I go somewhere, do what your mom says. Take care of your mom. Don’t ask where Papa is. Take care of both your sisters. Whenever you remember me, I’ll be around you. pic.twitter.com/HbPDlWShFr— Tehxi (@yajnshri) July 28, 2026
ஒரு தந்தையின் அளப்பரிய அன்பையும், குடும்பத்தின் மீதான அவரது அக்கறையையும் வெளிப்படுத்தும் இந்த உருக்கமான இறுதி வார்த்தைகள் கேட்போரின் நெஞ்சைக் கரைய வைக்கின்றன. தான் இல்லாத காலத்திலும் தன் மகன் குடும்பத்தைப் பொறுப்போடு வழிநடத்த வேண்டும் என்ற நம்பிக்கையோடும், அழியாத பாசத்தோடும் அவர் கூறிய இந்த வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
