LATEST NEWS
காலையிலேயே அதிர்ச்சி… திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரரான ஜெயன் தங்கராஜ் (54) மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு காரணமாக காலமானார். தீவிர வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெயன் தங்கராஜின் மறைவு அவரது குடும்பத்தினரிடையேயும், திமுக வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
