தம்பி விஜய்…! என் வீட்ல வச்சி சொன்னதை மறந்துட்டீங்களா..? SORRY கேட்டீங்களே… மிசா சிறைக்கொடுமைகளை விளக்கி, முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தம்பி விஜய்…! என் வீட்ல வச்சி சொன்னதை மறந்துட்டீங்களா..? SORRY கேட்டீங்களே… மிசா சிறைக்கொடுமைகளை விளக்கி, முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதிலடி..!!

Published

on

எமர்ஜென்சி காலத்தில் தான் எதிர்கொண்ட ‘மிசா’ சிறைக்கொடுமைகள் மற்றும் முதலமைச்சர் விஜய் தனக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கள் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார். “வீட்ல என்னை மீட் பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?” என்ற கேள்வியுடன் அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பதிவு தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் சர்காரியா கமிஷன் மற்றும் கலைஞர் கருணாநிதி குறித்துத் தவறான தகவல்களைக் கூறியுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரசியலுக்காகக் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டுகளையே தற்பொழுது விஜயும் பேசுகிறார் எனக் குறிப்பிட்டுள்ள அவர், எவர் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என்றும், சந்தேகம் இருந்தால் சட்டமன்ற நூலகத்திற்குச் சென்று தனது போராட்ட வரலாற்றை விபரம் தெரிந்தவர்கள் படித்துப் பார்க்கட்டும் என்றும் சாடியுள்ளார்.

Advertisement

அவசரநிலைப் பிரகடன (மிசா) காலத்தில் சிறையில் கைதானபோது தங்களுக்கு நேர்ந்த கொடூரத் தாக்குதல்களை ஸ்டாலின் அந்த வீடியோவில் நினைவுகூர்ந்துள்ளார். காவலர்களின் கடுமையான தாக்குதலால் தனது தாடை எலும்பு உடைந்ததையும், தன்னைக் காப்பாற்ற முயன்ற தனது அருமை அண்ணன் சிட்டிபாபு சிறையிலேயே தன்னுயிரை ஈகம் செய்ததையும் அவர் உருகமுடன் விவரித்துள்ளார். இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவதும், அதன் விளைவுகளைச் சந்திப்பதும் தங்களுக்குப் புதியதல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாகச் சந்தித்தபோது நடந்த உரையாடலை நினைவூட்டிய ஸ்டாலின், “தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு என்னிடம் ‘சாரி’ கேட்டீர்கள்; அதற்கு நான் பரவாயில்லை தம்பி, நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர், யாரைப் பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று கூறினேன், ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டீர்களே” என்று ஆதங்கப்பட்டுள்ளார். மேலும், தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு படுகுழியில் கிடப்பதாகவும், பல தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வாய் திறக்காமல் விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே அரசு வீணாக்கி வருவதாகவும் முதலமைச்சர் விஜய் மீது மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in