CINEMA
ஆபாசமாக காட்டமாட்டேன்..!மாதம் 37,440 ரூபாய் வரை வருமானம்..இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனால் கடுப்பான நடிகை பாயல் ராஜ்புத் பதிலடி..!
சமீபகாலமாக முன்னணி நடிகைகள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் பலர் இன்ஸ்டாகிராமில் தங்களது பிரத்யேகப் பக்கங்களைத் தொடங்கி, ‘சப்ஸ்கிரிப்ஷன்’ முறை மூலம் கணிசமாக சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், ‘ஆர் எக்ஸ் 100’ மற்றும் ‘மங்களவாரம்’ போன்ற திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை பாயல் ராஜ்புத்தும் தற்போது இணைந்துள்ளார். இந்த ஆண்டு லெஜண்ட் சரவணாவுடன் ‘லீடர்’ படத்தில் ஸ்பையாக நடித்து கோலிவுட்டிலும் முகம் காட்டிய இவருக்கு, இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். தற்போது இவருடைய சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் 96 பேர் இணைந்துள்ள நிலையில், மாதத்திற்கு சுமார் 37,440 ரூபாய் வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
வழக்கமாக சினிமாக்களிலும் இன்ஸ்டா பக்கங்களிலும் தாராள கவர்ச்சி காட்டி வரும் பாயல், இந்த கட்டணச் சேவையைத் தொடங்கிய உடனே சில நெட்டிசன்கள் அவரிடம் ஆபாசமான மற்றும் எக்ஸ்க்ளூசிவ் அடல்ட் கன்டென்ட்டுகளை பதிவிடுமாறு வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாயல் ராஜ்புத், அவர்களுக்கு அதிரடியான பதிலடி கொடுத்து ஆவேசமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஆபாசமான விஷயங்களை எதிர்பார்த்து யாராவது என்னை சப்ஸ்கிரைப் செய்ய நினைத்தால், தயவுசெய்து இப்போதே இங்கிருந்து ஓடிவிடுங்கள்; அதற்கு இங்கே இடமே இல்லை” என்று நெட்டிசன்களின் வாயை அடைத்துள்ளார்.
திரைப்படங்களில் எவ்வித தயக்கமும் இன்றி கவர்ச்சியாக நடித்தாலும், சமூக வலைதளக் கட்டணப் பக்கத்தில் எல்லை மீற மாட்டேன் என்பதில் பாயல் உறுதியாக இருக்கிறார். எவ்வித முகமூடியும் இல்லாத தனது உண்மையான, எதார்த்தமான தினசரி வாழ்க்கைப் பக்கத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமே இந்த சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் என்று அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழில் இவர் நடித்துள்ள ‘கோல்மால்’ திரைப்படம் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் வேளையில், பாயலின் இந்த போல்டான அறிவிப்பு அவரது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை உயர்த்துமா அல்லது குறைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
