CINEMA
“விஜய் ரசிகை என்பதால் ஏன் இவ்வளவு வெறுப்பு..?” ஜனநாயகன் படம் பார்த்தா தற்குறிகளா..? சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுப்பவர்களுக்கு நடிகை மீஷா கோஷல் ஆவேசக் கேள்வி..!!
தங்களுக்குப் பிடித்த கதாநாயகனின் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அனைவருக்கும் முழு உரிமை உள்ளது என்றும், அது ஒவ்வொரு தனிநபரின் விருப்பமும் தேர்வும் ஆகும் என்றும் நடிகை மீஷா கோஷல் தெரிவித்துள்ளார். தளபதி விஜய்யின் ரசிகர்கள் என்பதற்காக எங்கள் மீது ஏன் இத்தனை வெறுப்பைக் காட்டுகிறீர்கள், நாங்கள் அப்படி என்ன தவறு செய்தோம் என்று சமூக வலைத்தளங்களில் எழும் விமர்சனங்களுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம் ஒரு விஜய் ரசிகை என்பதற்காகத் தன்னைச் சமூக வலைத்தளங்களில் ‘அன்ஃபாலோ’ செய்ய நினைப்பவர்கள் தாராளமாகச் செய்து கொள்ளலாம் என்று அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். வேறு ஒரு கதாநாயகனின் ரசிகர்களாக இருந்தால் இப்படிப் பேசுவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், நமக்குத் தெரிந்த மற்றும் பிடித்த ஹீரோவைக் கொண்டாடுவதால் தங்களைச் ‘தற்குறிகள்’ என்று விமர்சிப்பது முறையல்ல என்றும் பேசியுள்ளார்.
ஜனநாயக ரீதியாக நடைபெறும் ஒரு திரைப்பட வெளியீட்டையும், மாணவர்கள் நடத்தும் போராட்டத்தையும் ஒன்றாகத் தொடர்புபடுத்திப் பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது என்று அவர் விளக்கியுள்ளார். தங்களுக்கு என்ன பிரச்சனை என்று விமர்சகர்களை நோக்கிக் கேட்டுள்ள நடிகை மீஷா கோஷலின் இந்த ஆதங்கப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
