CINEMA
FLASH: காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட போஸ்டர் கிழிப்பு… கர்நாடகாவில் பரபரப்பு..!!
காவிரியில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் அம்மாநிலத்தைச் சேர்ந்த ‘விஜய சேனா’ எனும் அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் போஸ்டரை அவர்கள் நடுரோட்டில் கிழித்தெறிந்து தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வரும் சூழலில், இந்த போஸ்டர் கிழிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் திரைப்பட போஸ்டர்கள் கர்நாடகாவில் இலக்காக்கப்பட்டு வருவது, இரு மாநில எல்லைப் பகுதிகளில் மீண்டும் அரசியல் ரீதியான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
