LATEST NEWS
டார்ச் லைட் அடிச்சுக் தேடுனாக்கூட காணாத கட்சி… மகனுக்காகக் கொள்கையை அடகு வைத்த வைகோ.. மல்லை சத்யா பகீர் குற்றச்சாட்டு..!!
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான வைகோ, தனது மகனுக்காகக் கட்சியின் கொள்கைகளைச் சமரசம் செய்து கொண்டு தற்போது நகைச்சுவை நடிகரைப் போல மாறி வருகிறார் என்று மல்லை சத்யா காரசாரமாகச் சாடியுள்ளார். “டார்ச் லைட் அடிச்சி தேடுனா கூட காணாத கட்சியா இருக்குயா உன் கட்சி…” என்று ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த தொண்டர்களைப் புறக்கணித்துவிட்டு மகனின் பேச்சைக் கேட்டு நடப்பதால் மதிமுக இன்று முகவரியிழந்து நிற்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், வைகோவின் முதன்மைச் செயலாளரான துரை வைகோ உண்மையில் பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆகச் செயல்பட்டு வருகிறார் என்றும் மல்லை சத்யா பரபரப்பு குற்றச்சாட்டைக் முன்வைத்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே பாஜக எம்பிக்களிடம் கையெழுத்து வாங்குவது, மத்திய அமைச்சர் பதவியைப் பெறத் துடிப்பது என துரை வைகோவின் செயல்பாடுகள் அனைத்தும் பாஜகவிற்குச் சாதகமாகவே அமைந்திருப்பதாகவும், வைகோ தனது கட்டுப்பாட்டை இழந்து மகனின் பேராசைக்குத் துணைபோவதாகவும் சாடினார்.
