LATEST NEWS
ஈரானில் அடுத்த அதிர்ச்சி..! புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருக்குப் போராட்டம்… பரபரப்பைக் கிளப்பும் சர்வதேச உளவுத் தகவல்கள்…!!
ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்பொழுது கோமா நிலைக்குச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடலாம் என்ற செய்தி வரக்கூடும் என்றும் மூத்த அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவரது தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட போது, மொஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவர் கடந்த மார்ச் மாதம் உச்ச தலைவராகப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் நேரில் பங்கேற்கவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவரது தற்போதைய இருப்பிடம் மற்றும் உடல்நிலை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், அவர் ஒரு ‘மறைமுகத் தலைவர்’ போலச் செயல்பட்டு வருவதாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஈரானிய அரசுத் தரப்பில் இத்தகவல்கள் மறுக்கப்பட்டு வந்தாலும், அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களாலேயே அவரை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகி இந்தச் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
