LATEST NEWS
நாங்க தீய சக்தி..? அப்போ நீங்கள் தூய சக்தியா..? எம்எல்ஏ வினோத் கண்ணன் பேச்சால் சட்டப்பேரவையில் கொந்தளித்த கே.என்.நேரு…!!
சட்டப்பேரவையில் சிப்பாய் புரட்சியையும் விசில் புரட்சியையும் ஒப்பிட்டுப் பேசிய வேலூர் தவெக எம்எல்ஏ வினோத் கண்ணன், “தீய சக்தியை ஒழித்து புரட்சி செய்தோம்” எனக் குறிப்பிட்டார். இதற்கு அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது இந்த உரையாடலால் சட்டப்பேரவையில் திடீர் சலசலப்பும் காரசாரமான விவாதமும் உருவானது.
வினோத் கண்ணனின் பேச்சால் ஆவேசமடைந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “தீய சக்தியா? நீங்கள் என்ன நல்ல சக்தியா?” என வினோத் கண்ணனை நோக்கிக் காட்டமாக கேள்வி எழுப்பினார். நிலைமையைச் சீர்செய்ய குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், “உங்களை தீய சக்தி எனச் சொல்லவில்லை; நாங்கள் தூய சக்தி என்றுதான் அவர் கூறினார்” எனப் பதிலளித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
