LATEST NEWS
பகீர்.. 2026-ல் உலக நாடுகளைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட இயற்கைச் சீற்றங்கள்…!ஒரே ஆண்டில் 40,000-க்கும் அதிகமான உயிர்களைப் பலிவாங்கிய காலநிலை மாற்றம்.. 26-ந் தேதிக்கு பின்னால் மறைந்திருக்கும் கொடூர மர்மம்..!!
வெள்ளம், புயல், நிலநடுக்கம், தீவிர வெப்பம் மற்றும் உருகும் பனிப்பாறைகள் என 2026-ம் ஆண்டு இயற்கை பேரழிவுகள் அதிகம் நிறைந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. இது தனித்தனி சம்பவங்களா அல்லது பூமியின் புதிய மாற்றமா என விஞ்ஞானிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதில் சுவாரஸ்யமாக, உலகையே உலுக்கிய பல முக்கிய இயற்கைப் பேரழிவுகளின் பின்னணியில் ’26’ என்ற தேதி மீண்டும் மீண்டும் இடம்பெற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவில் கொட்டித் தீர்த்த பெருவெள்ளத்தில் 200 பேர் உயிரிழந்தனர். மடகாஸ்கரைத் தாக்கிய ஜிசானி மற்றும் பிதியா புயல்களால் 73 பேர் பலியாகினர்; 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். கொங்கோவின் கோல்டன் சுரங்க நிலச்சரிவில் 70 குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.
ஐரோப்பாவில் நிலவிய 4 கடுமையான வெப்ப அலைகளால், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் தீவிரமடைந்து வழக்கத்தை விட 35 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகின. ஜூன் 24-ல் வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து 6,125 பேர் உயிரிழந்தனர்; 61,000 பேர் காயமடைந்தனர். இதுவே 2026-ன் மிகக் கொடிய நிலநடுக்கப் பேரழிவாகும். ஆகஸ்ட் 15-ல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 73,000 வீடுகள் சேதமடைந்து 1,80,000 மக்கள் வீடுகளை இழந்து வெளியேற்றப்பட்டனர்.
இப்பட்டியலில் அண்மையில் சேர்ந்த இமயமலைப் பேரழிவில் இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 26-ந்தேதி லாங்டாங் லிருங் பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததால், ஆற்றில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மனிதன் தன் சுயநலத்திற்காக ஆறுகளைக் கட்டுப்படுத்துவது, மலைகளைக் குடைந்து பாதைகள் அமைப்பது என இயற்கையை வெல்ல நினைத்த தந்திரங்கள் அனைத்தும் பேரழிவுகளின் முன் தவிடு பொடியாகின்றன. இனியாவது இயற்கையோடு இணைந்து பயணித்து அதைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயச் சூழல் நமக்கு உருவாகியுள்ளது.
