LATEST NEWS
“நானும் உங்கள மாதிரி தான்..” விமானத்தில் ஏறிய ‘இன்ட்ரோவர்ட்’ வாலிபர்.. பேனாவை நீட்டியதும் பணிப்பெண் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!!
ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் ஒருவர், தனது விமானத்தில் பயணித்த ஒரு பயணியிடம் வழங்கிய நெகிழ்ச்சியான கடிதம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் 75 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ‘இன்ட்ரோவர்ட் சாஹில்’ என்ற பெயரில் பயணக் காணொளிகளை உருவாக்கி வரும் சாஹில் குப்தா என்ற வாலிபர், அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதில் இருக்கும் கூச்சத்தைப் போக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, விமானப் பயணத்தின் போது அங்கிருந்த ஒரு பணிப்பெண்ணிடம் சென்று தனக்காக ஒரு சிறிய கடிதம் எழுதுமாறு பேனா மற்றும் காகிதத்தைக் கொடுத்துள்ளார்; அந்தப் பணிப்பெண்ணும் புன்னகையுடன் அதனை ஏற்று ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
https://www.instagram.com/reel/DdeEIgATEtk/?utm_source=ig_embed&ig_rid=AtSNuOL_HX66hq03g9y3OvD
அந்தக் கடிதத்தில், “நானும் உங்களைப் போல பிறரிடம் பழகத் தயங்கும் ஒரு இன்ட்ரோவர்ட் தான்; இதனால் உங்களுடைய இந்த முயற்சி எவ்வளவு கடினமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என அந்தப் பணிப்பெண் எழுதியுள்ளார். மேலும், அளவுக்கு அதிகமாகச் சிந்திப்பதே இன்றைய தலைமுறையின் பெரிய வலியாக உள்ளதாகவும், “தனிமையாக இருப்பது என்பது தனிமை கிடையாது; உங்களுடன் நீங்கள் நேரத்தைச் செலவிடப் பழகிக் கொள்ளும்போது அந்தத் தனிமையே உங்களுக்குப் பேரமைதியாக மாறும்” என்றும் சாஹிலுக்கு அவர் வாழ்க்கை ஆலோசனையை வழங்கியுள்ளார். 35 ஆயிரம் அடி உயரத்தில் இரண்டு அறிமுகமில்லாத மனிதர்களுக்கு இடையே நடந்த இந்த ஆழமான உரையாடலின் வீடியோ தற்பொழுது நெட்டிசன்களின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
