LATEST NEWS
ஐயோ…! இந்த சொந்தக்காரங்க தொல்லை தாங்க முடியலப்பா… வாடகைக்கு ‘போலி ரூம்மேட்’ தேடிய பெண்… அடுத்து நடந்த ஷாக் சம்பவம்..!!
பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், தனியாக வசிப்பது குறித்து உறவினர்கள் கேட்கும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக ரெடிட் (Reddit) தளத்தில் வினோதமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “போலியான பெண் ரூம்மேட் தேவை” என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட அந்தப் பதிவில், சில நாட்களுக்குத் தனது உறவினர்கள் வீட்டிற்கு வரவிருப்பதால், தான் தனியாகப் பெரிய வீட்டில் வசிப்பதைப் பார்த்து அவர்கள் கேள்வி எழுப்புவதைத் தடுக்க இந்த ஏற்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடிப்புக்குச் சம்மதிக்கும் பெண்ணிற்குத் தனது வீட்டில் தனி அறை, இலவசத் தங்குமிடம், உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்படும் என்றும், எவ்வித வீட்டு வேலைகளும் செய்யத் தேவையில்லை என்றும் அவர் ஆஃபர் செய்துள்ளார். உறவினர்கள் முன்னிலையில் மட்டும் இருவரும் இணைந்து வசிப்பது போல இயல்பாகப் பேசி, சிரித்து நடிக்க வேண்டும் என்பது மட்டுமே முதன்மை நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவிய இந்த வினோத விளம்பரத்திற்குப் பெண்கள், தம்பதிகள் எனப் பல தரப்பிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட நேரடி மெசேஜ்கள் (DMs) குவிந்துள்ளன. தற்போதைக்குச் சில பெண்களைத் தேர்வு செய்து பேசி வருவதாக அப்டேட் செய்துள்ள அந்தப் பெண், தனது பதிவிற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
