“என் மீது வீண் அனுதாபம் காட்ட வேண்டாம்..!” 10-நாள் டைம்-லைன் ரிப்போர்ட்.. மொத்தமாக ஓடி ஒளிந்த வதந்திகள்.. அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் அதிரடி அதிரடி விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மீது வீண் அனுதாபம் காட்ட வேண்டாம்..!” 10-நாள் டைம்-லைன் ரிப்போர்ட்.. மொத்தமாக ஓடி ஒளிந்த வதந்திகள்.. அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் அதிரடி அதிரடி விளக்கம்..!!

Published

on

தமிழக அமைச்சர் எஸ். கீர்த்தனா தனது லண்டன் பயணம் மற்றும் உடல்நிலை குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த 10 நாட்களின் பயண விவரங்களை நாள் வாரியாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். லண்டனில் அவர் தீவிர மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரவிய வதந்திகள் அரசு நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதற்குத் தலைமைச் செயலகத்தில் ஊடகங்கள் வாயிலாக விளக்கமளித்த அமைச்சர், என் மீது யாரும் வீண் அனுதாபம் காட்டத் தேவையில்லை தான் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், லண்டனில் நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பல்கலைக்கழகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கலந்துகொண்டதற்கான முழு ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதாக ஆவேசத்துடன் தெரிவித்தார்.

அரசியல் உள்நோக்கத்துடனும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இத்தகைய போலிச் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பிய சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாகச் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொய் தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி டைம்-லைன் விளக்கத்தின் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in