சாந்தி – ஜான் பாண்டியன் சந்திப்பு உண்மை… நான் தான் கூப்பிட்டு போனேன்… உண்மையை காங்கிரஸ் பிரமுகர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாந்தி – ஜான் பாண்டியன் சந்திப்பு உண்மை… நான் தான் கூப்பிட்டு போனேன்… உண்மையை காங்கிரஸ் பிரமுகர்..!!

Published

on

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்திக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனுக்கும் இடையே சந்திப்பு நிகழ்ந்தது உண்மைதான் என்று காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் அதிரடி வாக்குமூலம் அளித்துள்ளார். சாந்தி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே ஜான் பாண்டியனுடனான அந்தச் சந்திப்பிற்குத் தான் ஏற்பாடு செய்ததாக ரஞ்சன் குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அந்தச் சந்திப்பிற்காகச் சாந்தியைத் தானே நேரில் அழைத்துச் சென்றதாகவும் ரஞ்சன் குமார் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கில் இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக இரு தரப்பிற்கும் இடையே மாறி மாறிப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in