LATEST NEWS
“ஐயோ கொடுமையே… ஆசையா ஏற்பாடு செஞ்ச ஹெலிகாப்டர் பயணம்… கல்யாணம் முடிஞ்ச சில மணி நேரத்துல சோகம்… ஒரே முடிவால நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!”
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா அருகே உள்ள டாட்சன்வில் பகுதியில் நடைபெற்ற கோலாகலத் திருமண விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் ஃபிஜி (25) மற்றும் ஜென்சி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்தனர். நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இந்த விழாவின் இறுதியில், புதுமணத் தம்பதியினரை சிறப்பு வழியனுப்பும் விதமாக ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரவு நேரத்தில் பயணம் புறப்பட்டபோது அப்பகுதியில் பலத்த மழையும், அடர்ந்த மூடுபனியும் நிலவியுள்ளது. வணிக ரீதியிலான விமானியாகப் பணியாற்றி வந்த மணமகன் டேவ் ஃபிஜி, வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் பயணத்தைத் தவிர்க்கலாம் எனக் கூறியபோதிலும், ஹெலிகாப்டர் விமானி பயணத்தைத் தொடர முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மரங்களில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய நிகில் நர்குண்டகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால், படுகாயமடைந்த மணமகள் ஜென்சி, உயிரிழந்த தனது கணவரின் உடலுக்கு அடியில் சுமார் 6 மணி நேரம் நசுங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மோசமான வானிலையை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக ஹெலிகாப்டரை இயக்கியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறி, சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் திருமண மண்டப நிர்வாகத்தின் மீது மணமகள் ஜென்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
