“மனித கறி சூடா.. செம டேஸ்டா இருக்கு.. என்கிட்ட ஜாக்கிரதையா இருங்க..!” உடல் முழுக்க சாம்பல் பூசி வாளோடு மிரட்டிய பெண்.. மரண பயத்தைக் காட்டும் மயான வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“மனித கறி சூடா.. செம டேஸ்டா இருக்கு.. என்கிட்ட ஜாக்கிரதையா இருங்க..!” உடல் முழுக்க சாம்பல் பூசி வாளோடு மிரட்டிய பெண்.. மரண பயத்தைக் காட்டும் மயான வீடியோ..!!

Published

on

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மயானம் ஒன்றில், எரியும் சிதைக்கு அருகில் பெண் ஒருவர் மாந்திரீக சடங்குகளைச் செய்து, பிணத்தின் கருகிய இறைச்சியை உண்ணும் நெஞ்சைக் குலைக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. காலி நந்த் கிரி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண், உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டு, எரியும் சிதைக்கு அருகில் சென்று எலும்புகள் மற்றும் மனித மண்டை ஓட்டைத் தேடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், அவர் ஒரு வாளைக் கொண்டு எரியும் சிதையிலிருந்து மனித உடலின் கருகிய இறைச்சியை எடுத்து உண்ணும் காட்சிகள் காண்போரை அருவருப்பிலும் மாபெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவை யாரோ பதிவு செய்து கொண்டிருந்த போது, அந்தப் பெண் கருகிய இறைச்சியைச் சாப்பிட்டவாறே, “பாருங்கள், எரியும் சிதையிலிருந்து சூடாக மனித இறைச்சியை எடுத்துச் சாப்பிடுகிறேன், இது மிகவும் சுவையாக இருக்கிறது. பெரிய மாந்திரீகர்களை எல்லாம் நான் கொன்றுள்ளேன், என்னிடம் கவனமாக இருங்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மாந்திரீக சடங்கிற்காகச் சடலத்தைச் சிதைத்து மனித இறைச்சியை உண்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்துக் காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காகத் தற்பொழுது காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in