LATEST NEWS
“சோஃபாவை நீங்க மட்டும்தான் வச்சுக்கணுமா?” நாங்கள் எல்லாம் வாங்கக் கூடாதா..? திமுகவை வெளுத்தெடுத்த வன்னி அரசு..!!
சென்னை மயிலாப்பூரில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற மிலாது நபி விழாவில் கலந்து கொண்டு பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, திமுக மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது இந்த உரை தற்போதைய தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழா மேடையில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “சட்டப்பேரவையில் சோஃபா என்று சொன்னாலே திமுக உறுப்பினர்கள் பேசக்கூடாது என்று கூச்சலிடுகிறார்கள். சோஃபாவை நீங்கள் மட்டும் தான் வைத்திருக்க வேண்டுமா? நாங்கள் எல்லாம் வாங்கக் கூடாதா? எல்லோருக்கும் சோஃபா என்பது தான் உண்மையான திராவிட மாடல்” என்று கூறி அண்மைக்காலமாக சர்ச்சையாகி வரும் சோஃபா விவகாரத்திற்குப் பதிலடி கொடுத்தார்.
மேலும் திமுகவினரின் விமர்சனப் போக்கு குறித்துப் பேசிய அவர், “தற்போது திமுகவினர் பாஜகவை அடிப்பதை (விமர்சிப்பதை) விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் (விசிக) தான் அதிகமாக அடிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். மக்களுக்கான சமூகநீதிப் பயணமே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
