பிரபாகரன் பெயரை சொல்லி ஏமாத்துறாரு.. நாதக RSS- கிளை கட்சி… சீமானை கடுமையாக விமர்சித்த வன்னி அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபாகரன் பெயரை சொல்லி ஏமாத்துறாரு.. நாதக RSS- கிளை கட்சி… சீமானை கடுமையாக விமர்சித்த வன்னி அரசு..!!

Published

on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) துணைப் பொதுச்செயலாளரும், தற்போதைய அமைச்சருமான வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி சிலர் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சி என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கிளை அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது என்று சாடினார். தமிழ்நாட்டின் உண்மையான தமிழ் தேசிய இயக்கம் எதுவென்றால், அது தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement

மேலும், அரசியல் சூழலால் தற்போது தான் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ (MLA) அல்லது அமைச்சராகவோ பதவி வகிக்கலாம், ஆனால் அந்தப் பதவிகளைத் தாண்டி “நான் ஒரு விசிககாரன்” என்று சொல்வதே தமக்கு எப்போதும் பெருமை அளிக்கும் விஷயம் என்றும் வன்னி அரசு அந்த நிகழ்வில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in