LATEST NEWS
“இவர் என் மாமா…” டெலிவரி பாயை 5 ஸ்டார் ஓட்டலுக்கு கூட்டிச் சென்று வாலிபர் வாலிபர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!
இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி ஊழியரைத் தனது இருசக்கர வாகனத்தில் 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மில்க்ஷேக் வாங்கித் தந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சையது மெஹ்தி என்ற அந்த இன்ஸ்டா பிரபலம், எளிய அன்றாடத் தொழிலாளர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அதை வீடியோவாகப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அந்த டெலிவரி ஊழியரை அணுகி, “என்னுடன் 5 ஸ்டார் ஓட்டலுக்கு வருகிறீர்களா?” என்று அவர் கேட்க, அந்த ஊழியரும் சம்மதித்து இருவரும் பைக்கில் ஓட்டலுக்குக் கிளம்பினர்.
அவர்கள் ஓட்டலை அடைந்தபோது, ஊழியர் டெலிவரி சீருடையில் இருந்த காரணத்தால் வாசலில் இருந்த பாதுகாவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். உடனே சையது மெஹ்தி, அவர் “தன்னுடைய மாமா தான்” என்று கூறி ஒருவழியாக அனுமதி பெற்று அவரை ஓட்டலின் உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தார். அங்கு அவருக்கு சுவையான மில்க்ஷேக் ஆர்டர் செய்து கொடுத்தார். இதுதான் தனக்கு முதல்முறை என்றும், இதற்கு முன் தான் 5 ஸ்டார் ஓட்டலுக்கு வந்ததே இல்லை என்றும் நெகிழ்ச்சியுடன் கூறிய அந்த ஊழியர், மில்க்ஷேக் மிகவும் நன்றாக இருந்ததாகக் கூறி சையதுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். எளிய மனிதரின் ஆசையை நிறைவேற்றிய இந்த அன்பான நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
