“அந்த அங்கிள் தான் குழந்தைக்கு அப்பா” மானத்துக்கு பயந்து கற்பத்தை மறைத்த பெற்றோர்… 17 வயது சிறுமி சொன்ன விஷயம்… வசமாக சிக்கிய 40 வயது நபர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அந்த அங்கிள் தான் குழந்தைக்கு அப்பா” மானத்துக்கு பயந்து கற்பத்தை மறைத்த பெற்றோர்… 17 வயது சிறுமி சொன்ன விஷயம்… வசமாக சிக்கிய 40 வயது நபர்..!!

Published

on

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அந்தோணிராஜ் (40) என்ற தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குச் செல்லாத அந்தச் சிறுமி கடந்த ஆண்டு கர்ப்பமடைந்ததை அறிந்த பெற்றோர், அவமானத்திற்கு அஞ்சி அந்த விபரத்தை வெளியில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அச்சிறுமிக்குக் குழந்தை பிறந்தபோது, அவருக்கு 18 வயது நிரம்பவில்லை என்பதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் தச்சநல்லூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளது. இதையடுத்து டவுன் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ மரபணு பரிசோதனையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு அவர் காரணமில்லை என்பது தெரியவந்தது.

Advertisement

அதன்பின்னர் நடந்த தொடர் விசாரணையில், தச்சநல்லூர் கீழக்கரையைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணிராஜ் என்பவர்தான் ஆசை வார்த்தை கூறி, மிரட்டித் தன்னை பலாத்காரம் செய்ததாகச் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்துள்ளதோடு, பிறந்த குழந்தையின் மரபணுவோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அந்தோணிராஜுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in