LATEST NEWS
“அப்பா, அம்மா எங்களை மன்னிச்சுடுங்க..!” படுக்கை அருகே விஷ பாட்டில்… மகன்கள் மண்டியிட்டுச் சொல்லும் அந்த ஒரே வார்த்தை.. நெட்டிசன்களைக் கண்ணீர் சிந்த வைத்த வீடியோ..!!
சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறுமை மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக, முதியவர்கள் தங்களை முடித்துக் கொள்ளும் அதிர்ச்சிகரமான கலாச்சாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களை நோக்கி இளைஞர்கள் வேலைதேடி இடம்பெயர்வது, கிராமங்களில் போதிய பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாதது ஆகியவை இத்தகைய சூழலுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. நோய்வாய்ப்பட்ட அல்லது தங்களால் குடும்பத்திற்குச் சுமை என்று கருதும் முதியவர்கள், தங்களின் பிள்ளைகளுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகத் தாங்களாகவே உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்கின்றனர். இதற்காக மகன்கள் விஷ பாட்டிலைக் கொண்டு வந்து வைப்பதும், பெற்றோர் அதை அருந்தி உயிரிழப்பதும் போன்ற கொடுமையான சம்பவங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Only in China — this is a common practice among impoverished rural families: when a son can no longer afford to support his parents or pay for their medical treatment—yet the parents remain bedridden and linger on—he will kneel before them to explain the situation, then place a… pic.twitter.com/pIlmFNxd6J— Bin Xie (@bxieus) August 7, 2026
இந்தக் கிராமப்புற முதியவர்கள் மத்தியில் விஷம் அருந்துதல், தூக்கிட்டுக்கொள்ளுதல், மற்றும் நீரில் மூழ்கி உயிரை விடுதல் ஆகிய மூன்று வழிகளுமே தங்களின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றும் புதிய “மூன்று மகன்கள்” என்று பரிதாபமாக விவரிக்கப்படுகின்றன. பெற்ற பிள்ளைகள் தங்களைக் காப்பாற்றாத நிலையில், இந்த மூன்று கொடூர வழிகளுமே தங்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உண்மையான “மகன்கள்” என அம்மக்கள் கருதும் அவலநிலை நிலவுகிறது. சீன சமூகவியலாளர்களின் ஆய்வுகளிலும் வெளிவந்துள்ள இந்தத் துயரச் சம்பவம், நவீன மயமாக்கலின் நிழலில் கிராமப்புற முதியோரின் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களின் தேவையை உலகிற்கு உணர்த்துகிறது.
