“அடக் கொடுமையே.. மற்ற ஊர்ல இயற்கை பேரிடர்… ஆனா இங்க அரசாங்க பேரிடர்..!” நடுரோட்டிலேயே மண்ணுக்குள் புதைந்த பஸ்கள், கார்கள்… சோசியல் மீடியாவை அதிரவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக் கொடுமையே.. மற்ற ஊர்ல இயற்கை பேரிடர்… ஆனா இங்க அரசாங்க பேரிடர்..!” நடுரோட்டிலேயே மண்ணுக்குள் புதைந்த பஸ்கள், கார்கள்… சோசியல் மீடியாவை அதிரவைக்கும் வீடியோ..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு அவலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் இயற்கை பேரிடர்கள் தாக்கலாம், ஆனால் சத்தீஸ்கரில் அரசு நிர்வாகத்தின் பேரிடர்தான் மக்களைத் தாக்குகிறது என்று அங்குள்ள சாலை உள்கட்டமைப்பு வசதிகளை நெட்டிசன்கள் மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள உர்கா சாலையில்தான் இந்தத் திகைப்பூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

https://twitter.com/_CopAmir_/status/2093975151008444459/video/1

Advertisement

கடந்த ஆகஸ்ட் 29 அன்று பெய்த கனமழையின் காரணமாக, அந்த முக்கியச் சாலையில் திடீரென ஏற்பட்ட அசுர மண் சரிவினால், அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்த பஸ்கள், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நடுரோட்டிலேயே மண்ணிலும் மணலிலும் சிக்கி முழுமையாகப் புதைந்துள்ளன. இக்கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவினர், தற்பொழுது ஜேசிபி இயந்திரங்களை அசுர வேகத்தில் பயன்படுத்தி மண்ணுக்குள் புதைந்த வாகனங்களை மீட்கும் அதிரடிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மோசமான நிலையில் இருந்த சாலையே இந்த வாகனப் புதைவுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in