“என் மகள்களின் படிப்புக்காக எதையும் செய்வேன்..!” புடவையுடன் வெறுங்காலில் ஓடி மாரத்தானில் மாஸ் காட்டிய 47 வயது தாய்… வைரலாகும் நெகிழ்ச்சிக் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மகள்களின் படிப்புக்காக எதையும் செய்வேன்..!” புடவையுடன் வெறுங்காலில் ஓடி மாரத்தானில் மாஸ் காட்டிய 47 வயது தாய்… வைரலாகும் நெகிழ்ச்சிக் கதை..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் நடந்த “அமிர்த் தௌட்” மாரத்தான் போட்டியில், 47 வயதான ரமாபாய் ரன்வீர் என்ற தாய் தனது மகள்களின் படிப்புச் செலவுக்கான கட்டணத்தைக் கட்டுவதற்காகப் புடவை அணிந்து, வெறுங்காலுடன் ஓடி முதலிடம் பிடித்துள்ளார். கணவரை இழந்த பிறகு, தனது குடும்பப் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே ஒரு அகாடமியில் சமையல் வேலை செய்து வரும் இவர், இந்த வெற்றியின் மூலம் முதல் பரிசாக ரூ.3,000 வென்றுள்ளார். மழை காரணமாகச் சாலை சேறும் சகதியுமாக இருந்தபோதிலும், தளராத மன உறுதியுடன் ஓடி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

ரமாபாய்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பி.எஸ்சி (B.Sc) படித்து வருகிறார், இளைய மகள் காவல் துறைக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். வறுமை காரணமாகக் குடும்பத்தை நடத்தவும், மகள்களின் கல்விச் செலவைச் சமாளிக்கவும் போராடி வரும் ரமாபாய், தனது பிள்ளைகளின் படிப்புக்குத் தேவையான பணத்தைச் திரட்டவே இந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். இதற்கு முன் அவர் எந்தவிதமான சிறப்புப் பயிற்சியோ அல்லது ஆயத்தமோ எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தனது வெற்றிக்குப் பிறகு பேசிய ரமாபாய், “எனது மகள்களின் கல்விக்காக நான் எவ்வளவு சவால்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டி வந்தாலும், அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். எனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நான் தினமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார். பயிற்சி எதுவும் இன்றி வெறுங்காலுடன் ஓடி வெற்றி பெற்ற இவரது மன உறுதியையும், தாய்மையின் தியாகத்தையும் கண்டு மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் நெகிழ்ந்து கண்கலங்கினர். தற்போது இவரது வெற்றிப் பயணம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பெரும் முன்னுதாரணமாகவும் ஊக்கமாகவும் புகழப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in