“அவனை விட்டுடு… உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம்…” பெற்றோர் கொடுத்த மன உளைச்சல்… திருமணமான 3 மாதத்தில் 27 வயது BPSC ஆசிரியை எடுத்த கொடூர முடிவு..! வைசாலியையே உலுக்கிய தற்கொலை சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவனை விட்டுடு… உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம்…” பெற்றோர் கொடுத்த மன உளைச்சல்… திருமணமான 3 மாதத்தில் 27 வயது BPSC ஆசிரியை எடுத்த கொடூர முடிவு..! வைசாலியையே உலுக்கிய தற்கொலை சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மது பால் என்ற BPSC ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது பால் வைசாலியில் உள்ள கட்ஹரா காவல் எல்லைக்குட்பட்ட சேஹராகலா பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அவர் பள்ளிக்கு அருகில் உள்ள லலன் ஸ்ரீவாஸ்தவா என்பவரது வீட்டில் கடந்த ஓராண்டாக வாடகைக்குத் தங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று மாலை, மது பாலின் கணவர் கௌரவ் குமார் பால் அவருக்குப் பலமுறை போன் செய்தும் அவர் பதிலும் அளிக்காததால், கௌரவ் வாடகை வீட்டு உரிமையாளரைத் தொடர்பு கொண்டு விஷத்தைக் கூறியுள்ளார். கதவு பூட்டப்பட்டிருந்ததால், காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு 11 மணியளவில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மது பால் ஃபேன் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மது பால் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் பால் ஆகிய இருவரும் கடந்த மே 2-ஆம் தேதி காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கௌரவும் பீகாரில் மதுவுடன் தங்கி வந்துள்ளார். சமீபத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இருவரும் கான்பூருக்குச் சென்றிருந்தனர். அங்கு மதுவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு கௌரவ் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். பண்டிகை முடிந்ததும், ஆகஸ்ட் 28 அன்று பெற்றோர் மதுவை பீகாருக்கு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர். ஆகஸ்ட் 29 அன்று பள்ளிக்குச் சென்று தனது பணியை முடித்துவிட்டு மதியம் 1 மணிக்கு அறைக்குத் திரும்பிய மது பால், அன்றைய தினமே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisement

இந்தக் காதல் திருமணத்தில் ஆரம்பத்தில் இருந்தே மது பாலின் குடும்பத்தினருக்குச் சம்மதம் இல்லை எனக் கூறப்படுகிறது. கணவர் கௌரவின் நண்பர் அஜித் பால் தெரிவிக்கையில், திருமணத்திற்குப் பிறகும் மதுவின் பெற்றோர் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், “கௌரவை விவாகரத்து செய்துவிட்டு விலகிவிடு, உனக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கிறோம்” என்று அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரபூஷன் குமார், மது பால் மாணவர்களிடமும் சக ஆசிரியர்களிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்ளும் நல்ல ஆசிரியை என்றும், காதல் திருமணம் தொடர்பாகப் பெற்றோர் இடையே நிலவிய கருத்துவேறுபாடே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் மாதிரிகளைச் சேகரித்து அந்த அறைக்குச் சீல் வைத்துள்ளனர். உடற்கூராய்வுக்காகச் சடலம் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், காவல் துறையினர் வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in