“ஜெயலலிதாவுக்கு அப்புறம் ஒரு மைதானமாவது கட்டுனீங்களா..?” அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி கேள்வி.. செங்கோட்டையன் பெயரை இழுத்து உதயநிதியின் மாஸ் ரிப்ளை.. சட்டமன்றத்தில் உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஜெயலலிதாவுக்கு அப்புறம் ஒரு மைதானமாவது கட்டுனீங்களா..?” அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி கேள்வி.. செங்கோட்டையன் பெயரை இழுத்து உதயநிதியின் மாஸ் ரிப்ளை.. சட்டமன்றத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

தமிழகச் சட்டமன்றத்தில் சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே சுவாரசியமான விவாத மோதல் ஒன்று அரங்கேறியுள்ளது. சட்டமன்றத்தில் பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவுக்குப் பிறகு, தமிழகத்தில் சர்வதேசத் தரத்தில் எந்தவொரு புதிய விளையாட்டு மைதானமும் இதுவரை கட்டப்படவில்லை” என்று அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்தார். அமைச்சரின் இந்தத் திடீர் விமர்சனம் அவையில் இருந்த அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

https://twitter.com/PttvNewsX/status/2094319801271517325/video/1

Advertisement

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “பல வருடங்களாகத் தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் எங்கள் மூத்த சகோதரர் செங்கோட்டையன்; எனவே, கடந்த காலங்களில் கட்டப்பட்ட மைதானங்கள் குறித்த துல்லியமான தகவல்களை அவரிடமே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று எள்ளலுடன் சாதுர்யமாகப் பதிலளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனை வைத்தே தற்போதைய அமைச்சரின் கேள்விக்கு உதயநிதி முற்றுப்புள்ளி வைக்க முயன்ற இந்த காரசாரமான விவாதம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in