LATEST NEWS
“தலைவர் விஜய்க்காக பல இலட்சத்தை இழந்தோம்..” தவெக நிர்வாகி தற்கொலைக்குப் பின் மனைவி உடைத்த பகிரங்க உண்மை..!!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தவெக வார்டு செயலாளரான பரந்தாமன், உள்கட்சிப் பூசல் மற்றும் பதவி பறிப்பு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்துயரச் சம்பவம் குறித்துப் பரந்தாமனின் மனைவி தேவகி கண்ணீருடன் வெளியிட்ட புகாரில், விஜய் மக்கள் இயக்கக் காலத்திலிருந்தே தங்களது குடும்பத்தினர் தலைவர் விஜய்க்காகத் தீவிரமாக உழைத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் . மேலும், கடந்த பொதுத்தேர்தல் பணிகளுக்காகத் தங்களது சொந்தப் பணத்திலிருந்து பல லட்சம் ரூபாயைச் செலவு செய்து, தற்போது பெரும் நஷ்டமடைந்துள்ளதாகவும் அவர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இத்தகைய இக்கட்டான சூழலில், தங்களது உழைப்பை மதிக்காமல் பரந்தாமனுக்கு வழங்கப்பட்டிருந்த வார்டு செயலாளர் பதவியைத் தவெக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா திடீரெனப் பறித்துவிட்டதாகத் தேவகி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்துத் மாவட்டச் செயலாளரிடம் நேரில் சென்று நியாயம் கேட்டபோது, அவர் பரந்தாமனை மிகத் தரக்குறைவாகவும் அநாகரிகமாகவும் பேசி அவமானப்படுத்தியதாகவும், அந்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல் தான் தனது கணவர் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்ததாகவும் தேவகி பகிரங்கமாகச் சாடியுள்ளார். தவெக மாநாடு நெருங்கி வரும் வேளையில், மாவட்டச் செயலாளரின் மிரட்டலால் உழைத்த தொண்டர் ஒருவர் உயிரிழந்த இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
