LATEST NEWS
#BREAKING : ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 26) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், பொதுமக்கள் வானிலை மாற்றங்களைக் கவனித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
