அடப்பாவமே..! “தம்பி என்னாச்சு உனக்கு” ஓடிவந்து காப்பாற்ற வந்த அக்கா… அடுத்தநொடியே 2 பிள்ளையும் துடிக்க துடிக்க பலி… கதறி துடிக்கும் பெற்றோர்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவமே..! “தம்பி என்னாச்சு உனக்கு” ஓடிவந்து காப்பாற்ற வந்த அக்கா… அடுத்தநொடியே 2 பிள்ளையும் துடிக்க துடிக்க பலி… கதறி துடிக்கும் பெற்றோர்…!!

Published

on

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் – லதா தம்பதியினருக்கு நிறைமதி (10) என்ற மகளும், பாலபிரவின் (6) என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக சிறுவன் பாலபிரவின் மின்சாரம் தாக்கி துடிதுடித்துள்ளார்.

தனது தம்பிக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாத அக்கா நிறைமதி, பதறியடித்து ஓடிவந்து தம்பியைக் காப்பாற்ற முயன்று அவரைத் தொட்டுத் தூக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாய்ந்த மின்சாரம் நிறைமதியையும் தாக்கியதில், அக்கா – தம்பி இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

இக்கடூரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகப் பாடுபட்டு இரு குழந்தைகளையும் மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து, உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து அபிராமம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் மின்சாரத்திற்குப் பலிகொடுத்து தவிக்கும் பெற்றோரின் துயரம் மற்றும் இச்சம்பவம் கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்திய பெரும் சோகம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in