“நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்..!” மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த முதல்வர் விஜய்யை நாராகக் கிழித்த டிடிவி தினகரன்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்..!” மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த முதல்வர் விஜய்யை நாராகக் கிழித்த டிடிவி தினகரன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து ஆய்வு செய்ய மின்வாரியத் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்குப் போராடிக்கொண்டிருந்த மின் ஊழியர்களைச் சந்திக்காதது ஏன் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கக் கோரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மின்வாரிய அலுவலகத்தின் அருகே போராடி வருகின்றனர். இவர்களின் நியாயமான குரலுக்குச் செவிசாய்க்காமல், “நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ்” எனச் சமூக வலைதள வீடியோக்களுக்காக மக்களைப் பார்த்துக் கையசைத்து, சம்பிரதாயத்திற்காக மட்டுமே முதலமைச்சர் விஜய் ஆட்சியை நடத்தி வருவதாகத் தினகரன் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

மேலும், மின்வெட்டுப் பிரச்சினைக்குக் கடந்த சில நாட்களாகக் காற்று நின்றுவிட்டது, சோலார் மின்சாரத்தைச் சேமிக்க இடமில்லை எனப் பல சாக்குகளைக் கூறி வந்த அமைச்சர்கள், தற்போது பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பணிகள் நடக்காததுதான் காரணம் எனப் புதுக்கதை பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மின்சாரத் துறையைத் தவிர மற்ற அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைக்கும் எரிசக்தித் துறை அமைச்சர், ‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பது போலத் தமிழகமே இருளில் மூழ்கிய பின்புதான் இந்த உண்மைகளைக் கண்டறிந்தாரா என்றும் தினகரன் வினவியுள்ளார். எனவே, எதிர்க்கட்சிகள் மீது பழிபோட்டு மக்களைத் திசைதிருப்புவதை நிறுத்திவிட்டு, தடையற்ற மின்சாரம் வழங்குவதில் தவெக அரசும் மின்சார வாரியமும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in