LATEST NEWS
“வாவ் சூப்பர்..!” குப்பைக்கு போற இரும்பை வச்சு 14 வயது சிறுவன் செய்த மேஜிக்.. பல லட்சம் ரூபாய்க்கு விற்றுப்போன மிரட்டல் சம்பவம்..!!
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள டன்ஸ்பரோவைச் சேர்ந்த சார்லி குய்வர் என்ற 14 வயது சிறுவன், உடைந்த இயந்திரங்கள் மற்றும் பழைய இரும்புத் துண்டுகள் போன்ற கழிவுப் பொருட்களைக் கொண்டு அசாத்தியமான கலைநயமிக்க விலங்குகளின் உலோகச் சிற்பங்களை உருவாக்கி லட்சக்கணக்கானோரின் வரவேற்பைப் பெற்று வருகிறான். சிறு வயது முதலே கருவிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சார்லிக்கு, அவரது பெற்றோர் இரண்டு வயதிலேயே மின்சார ட்ரில்லை பயன்படுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். தற்போது பள்ளிப் படிப்புடன் சேர்த்து, மாலை நேரங்கள் மற்றும் வார இறுதிகளில் பழைய பொருட்கள் கிடங்குகளில் இருந்து சேகரிக்கும் உலோகங்களை வெட்டி, வெல்டிங் மூலம் இணைத்து இந்த அரிய சிற்பங்களை அவன் வடிவமைத்து வருகிறான்.
சார்லியின் அசத்தலான படைப்புகளில் ஒன்றான பெரிய அளவிலான உலோக ஓநாய் சிற்பம், சமீபத்தில் 8,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், காற்று வீசும்போது அசையும் வகையில் அவன் உருவாக்கிய ‘கைனடிக் ஈகிள்’ கழுகுச் சிற்பமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செப்டம்பர் 12 முதல் 27 வரை நடைபெறும் புகழ்பெற்ற ‘மார்கரெட் ரிவர் ரீஜியன் ஓபன் ஸ்டூடியோஸ்’ கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் 155 கலைஞர்களில், 14 வயதான சார்லிதான் மிகவும் இளைய கலைஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளான். அடுத்ததாகப் பாரம்பரிய இரும்பு வேலைப்பாடு நுட்பங்களைக் கற்றுக்கொள்ள ஐரோப்பா செல்லத் திட்டமிட்டுள்ள இந்தச் சிறுவனின் அசாத்திய கற்பனைத் திறன் ஒட்டுமொத்த உலகையும் வியக்க வைத்துள்ளது.
