LATEST NEWS
அடக் கடவுளே.. நெஞ்சைப் பிளந்த கனமான இரும்புக்கம்பி.. பைக் ஓட்டும்போதே பாய்ந்த கொடூரம்… அடுத்த நொடியே டெலிவரி பாய் செய்த அதிசயம்.. இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ..!!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கேப்ரியல் என்ற டெலிவரி ஊழியர், கடந்த ஜூலை மாதம் ஆர்டர் ஒன்றை டெலிவரி செய்யச் சென்றபோது ஒரு விசித்திரமான விபத்தில் சிக்கினார். தனக்கு முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென விலகிச் சென்றதன் காரணத்தை கேப்ரியலால் உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், உண்மையில் அந்த கார், எதிரே வந்த லாரியில் இருந்து கழன்று விழுந்த ஒரு கனமான உலோகக் கம்பியிடம் இருந்து தப்பிப்பதற்காகவே திடீரென விலகியுள்ளது. எதிர்பாராதவிதமாக அந்த உலோகக் கம்பி கேப்ரியலைத் தாக்கியதிலும், அவர் சுயநினைவை இழக்காமல் சமயோசிதமாகத் தனது மோட்டார் சைக்கிளைச் சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தியதுதான் இந்தச் சம்பவத்தின் மிகப்பெரிய ஆச்சரியமாகும்.
رجل برازيلي يدعى غابرييل يعمل كعامل توصيل، اثناء توصيله لاحد الطلبات في شهر يوليو الماضي تعرض لحادث غريب والاغرب انه بقي واعيا وتمكن من ايقاف دراجته على جانب الطريق
كانت امام غابرييل سياره وانحرفت فجأة لم يفهم غابرييل سبب هروب السيارة الا لاحقا، كانت السيارة تهرب من الشاحنه التي… pic.twitter.com/BugkpJ2xLq— Saif (@diol2n) August 11, 2026
இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த கேப்ரியல் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்குப் பிறகு, அவர் முற்றிலும் குணமடைந்து கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உயிருக்கே ஆபத்தான வகையில் கம்பி தாக்கியபோதிலும், சுயநினைவோடு வண்டியை நிறுத்தி உயிர் தப்பிய இவரது சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிசய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
