LATEST NEWS
“நீங்க கொடுத்த 8 முழ வேட்டியைக் கட்டிக்கிட்டு வாங்க..!” சட்டமன்றத்தையே அதிரவைத்த தவெக அமைச்சர் விஜய் பாலாஜியின் ஓப்பன் சவால்… மிரளும் திமுக வட்டாரம்..!!
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசில் 8 முழ வேட்டிக்கு பதிலாகத் தரமில்லாத 4 முழ வேட்டியைத் தவெக அரசு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் அதன் தரம் குறித்துச் சட்டமன்றப் பேரவையில் தற்பொழுது எழுந்துள்ள இந்த விவாதம், ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே ஒரு புதிய விவாத மோதலாக உருவெடுத்துள்ளது.
திமுகவின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பேரவையில் உடனடியாகப் பதிலடி கொடுத்துப் பேசிய தவெக அமைச்சர் விஜய் பாலாஜி, “பொங்கலுக்குப் பின் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதே 4 முழ வேட்டியைத்தான் தற்பொழுது வரை தொடர்ந்து கட்டி வருகிறோம்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், “திமுக ஆட்சிக் காலத்தில் நீங்கள் மக்களுக்கு வழங்கிய 8 முழ வேட்டியைக் கட்டி வாருங்கள். மக்கள் இரண்டு வேட்டிகளையும் பார்த்துவிட்டு எது தரமானது என்பதை அவர்களே நேரில் பார்த்து முடிவு செய்யட்டும்” என்று சவால் விடுத்துள்ளார். தவெக அமைச்சரின் இந்த வேட்டி சவால் சட்டமன்றத்தில் பெரும் சுவாரசியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
