“அடப்பாவிகளா.. ஓடும் லாரியில் ஏறி கோழி திருட்டு… கடைசியில் நேர்ந்த கொடூர விபரீதம்..!” சினிமா பாணியில் அரங்கேறிய கொள்ளை… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடப்பாவிகளா.. ஓடும் லாரியில் ஏறி கோழி திருட்டு… கடைசியில் நேர்ந்த கொடூர விபரீதம்..!” சினிமா பாணியில் அரங்கேறிய கொள்ளை… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில், தொழிற்சாலை ஒன்றில் இருந்து நான்கு டன் உறைவிக்கப்பட்ட கோழி இறைச்சியை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில், சினிமா பாணியில் ஓடும் லாரியிலேயே ஏறி கொள்ளையடித்த துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரியை ஒரு காரில் பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், ஓடும் லாரியின் பின்புறத்தில் அசாத்தியமாக ஏறி, அதன் கதவைத் திறந்து நகர்ந்து கொண்டிருக்கும் போதே கோழி இறைச்சிப் பெட்டிகளைத் தங்களது காரில் தூக்கிப் போட்டுள்ளனர். இவ்வாறு சுமார் 105 கிலோ கோழி இறைச்சியை அவர்கள் கொள்ளையடித்துத் தப்பிய இந்த ஒட்டுமொத்தக் காட்சிகளையும், பின்னால் வந்த மற்றொரு வாகன ஓட்டி தனது அலைபேசியில் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/pulsenewsbreak/status/2094384957443674432/video/1

Advertisement

சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கெய்ரோ காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி, இக்கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 6 முக்கியக் கொள்ளையர்களைக் கண்டறிந்தனர். அவர்களைக் கைது செய்யப் போலீஸார் அதிரடியாகச் சென்றபோது, கொள்ளைக் கும்பலுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இருதரப்பிலும் அனல் பறந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 கொள்ளையர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். எஞ்சிய 3 கொள்ளையர்களைக் காவல்துறையினர் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் லாரியில் கோழி திருடப்போய் 3 பேர் பலியான இந்த சினிமா பாணி விபரீதம் உலக அளவில் தற்பொழுது விவாதப் பொருளாகியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in