“Zomato-வில் ஆர்டர் செய்த உணவு..” 40 நிமிடம் நகராத டெலிவரி பாய்.. நேரில் சென்ற இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. வைரல் சம்பவம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“Zomato-வில் ஆர்டர் செய்த உணவு..” 40 நிமிடம் நகராத டெலிவரி பாய்.. நேரில் சென்ற இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. வைரல் சம்பவம்..!!!

Published

on

டெல்லியைச் சேர்ந்த ரிஷப் கௌசிக் என்பவர் சோமாட்டா செயலியில் உணவு ஆர்டர் செய்தபோது, டெலிவரி பாய் 40 நிமிடங்களாக ஒரே இடத்தில் நகராமல் நின்றதைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து அவர் அந்த இடத்திற்கு நேரில் சென்றபோது, அங்கே இரண்டு பேர் அவருடைய உணவை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விசாரணையில், அவருடைய உணவு வெறும் 100 ரூபாய்க்கு வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. மேலும், சோமாட்டோ செயலியின் வாடிக்கையாளர் சேவையில் தானியங்கி பதில் மட்டுமே வந்ததாகவும், சிறிது நேரம் கழித்து உணவு டெலிவரி செய்யப்படாத நிலையிலும் ‘டெலிவரி செய்யப்பட்டது’ என செயலியில் காட்டியதாகவும் அவர் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in