LATEST NEWS
தாராபுரம் இடைதேர்தல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு…? வெளியான அனல் பறக்கும் சர்வே ரிப்போர்ட்…!!!
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம், வேட்புமனுத் தாக்கலுடன் தொடங்கியிருந்தாலும் இன்னும் எதிர்பார்த்த பரபரப்பை எட்டவில்லை. பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளன. முக்கியத் தலைவர்களின் பிரசாரத் திட்டங்கள் தொடங்கும்போதுதான் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே பரிசுப் பொருட்களும் பணப் பட்டுவாடாவும் தாராளமாக இருக்கும் என்ற பிம்பம் நிலவி வந்தது. ஆனால், நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் மக்கள் திராவிடக் கட்சிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தவெக-விற்கு வாக்களித்ததாகக் கூறப்படும் அனுபவத்தால், இம்முறை பிரதான திராவிடக் கட்சிகள் பணத்தை நம்பியிருக்க தயங்குகின்றன. இதனால், தாராபுரம் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தின் மூலமாக மட்டுமே மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 2026 பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 81,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார். அதே தேர்தலில் திமுக வேட்பாளர் சுமார் 64,000 வாக்குகளும், தவெக வேட்பாளர் 46,000 வாக்குகளும் பெற்றிருந்தனர். தற்பொழுது அதிமுகவின் வெற்றி வேட்பாளரான சத்யபாமாவே தவெக வேட்பாளராகக் களம் இறங்குவதால், கடந்த முறை அதிமுகவிற்குச் சென்ற வாக்குகள் பெருமளவில் தவெக-விற்குச் செல்ல வாய்ப்புள்ளது.
ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குச் சென்ற வாக்குகளும், இம்முறை தவெக-வை நோக்கித் திரும்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வாக்குகள் ஒன்று திரண்டால் மட்டுமே தவெக-வை வீழ்த்த முடியும் என்ற எதார்த்த நிலை நிலவுகிறது. இதனால் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தாராபுரம் தொகுதிக்கு நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டால், தவெக-வின் வெற்றி மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தாராபுரம் தொகுதி மக்கள் அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தவெக முதலிடத்தைப் பிடிக்கும் என்ற சூழலில், திமுக மற்றும் அதிமுக இடையே இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான கடும் போட்டியே நிலவி வருகிறது.
