LATEST NEWS
“சாலையா… இல்ல வயல்வெளியா..?!” சீர்கெட்ட சாலையில் ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… அதிகாரிகளுக்கு விழுந்த சவுக்கடி.. இணையத்தில் தீயாய் பரவும் வினோத போராட்டம்..!!
சீதாக்கா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மங்கபேட்டை மண்டலம், கொத்தமல்லூரு கிராமத்தில் உள்ள முக்கியச் சாலை முற்றிலும் சீர்கெட்டு, கடுமையான பள்ளங்களும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. தினந்தோறும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், பள்ளிச் செல்லும் குழந்தைகளும், முதியவர்களும் சொல்லொணாத் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாகச் சாலையைச் சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும், ஊராட்சி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வந்துள்ளனர்.
సీతక్క ఇలాకాలో ఇదీ రోడ్ల దుస్థితి
రోడ్డుపై వరి నాట్లు వేసి నిరసన తెలిపిన గ్రామస్తులు
సీతక్క నియోజకవర్గం మంగపేట మండలం కొత్తమల్లూరు గ్రామంలో రోడ్డు పరిస్థితి అధ్వాన్నంగా ఉండడంతో, రోడ్డుపై వరి నాట్లు వేసి నిరసన తెలిపిన గ్రామస్తులు pic.twitter.com/qPuAbEJ8Tm— Telugu Scribe (@TeluguScribe) August 7, 2026
அதிகாரிகளின் இந்தத் தொடர் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் சாலையில் தேங்கியிருந்த சேற்று நீரில் நெல் நாற்றுகளை நட்டு வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் இந்த அதிரடிப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இது குறித்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது. இனியாவது அதிகாரிகள் விழித்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
