LATEST NEWS
ஐயோ என்னாச்சு..? வீட்டின் முன் மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது குழந்தை… மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி… கடலூரில் பரபரப்பு…!!
கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சையாங்குப்பம் பகுதியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே குழந்தை மயங்கிய நிலையில் கிடந்ததை அடுத்து, பதறிய தாய் குழந்தையை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களைப் பிடித்து கடலூர் துறைமுகப் பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் உறவினர்களும், பொதுமக்களும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
