அடச்சீ..! லிப்டுக்குள் இப்படியா பண்ணுவாங்க..? இளைஞர் செய்த காரியத்தால் ஷாக் ஆன பக்கத்துவீட்டுக்காரர்… சிசிடிவில் அம்பலமான உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடச்சீ..! லிப்டுக்குள் இப்படியா பண்ணுவாங்க..? இளைஞர் செய்த காரியத்தால் ஷாக் ஆன பக்கத்துவீட்டுக்காரர்… சிசிடிவில் அம்பலமான உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் உள்ள ‘ஷிப்ரா கிருஷ்ணா விஸ்டா’ குடியிருப்பு வளாகத்தின் மின்தூக்கியில் இந்த அநாகரிகமான சம்பவம் நடந்துள்ளது. மின்தூக்கியில் தனியாக இருந்த அந்த வாலிபர், அதன் கட்டுப்பாட்டுப் பலகத்தின் அருகிலேயே சிறுநீர் கழிப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நேரத்தில் லிப்ட் வெவ்வேறு தளங்களில் நின்று கதவுகள் திறந்தபோதும், அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது செயலைத் தொடர்ந்துள்ளார்.

Advertisement

இதற்கிடையே, லிப்ட் கதவு திறந்தபோது வெளியில் நின்ற ஒரு நபர் வாலிபரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து பின்வாங்கியுள்ளார். பின்னர் அந்த லிப்ட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, குடியிருப்பாளர்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இச்செயலால் அப்பகுதி மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in