அடச்சீ… மனுஷனாடா நீங்களாம்..? கதற கதற சிறுமியை வீடியோ எடுத்து கெத்து காட்டிய கும்பல்… ஓட ஓட விரட்டி குற்றவாளியை சுட்டு வீழ்த்திய அதிரடிப் படை..!!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ… மனுஷனாடா நீங்களாம்..? கதற கதற சிறுமியை வீடியோ எடுத்து கெத்து காட்டிய கும்பல்… ஓட ஓட விரட்டி குற்றவாளியை சுட்டு வீழ்த்திய அதிரடிப் படை..!!!

Published

on

பீகாரின் ஜமுய் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், மர்ம கும்பல் ஒன்றால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. செப்டம்பர் 19 அன்று ஜமுய்-லகிசராய் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவன் மற்றும் மாணவி ஒருவரை வழிமறித்த மர்ம கும்பல், அச்சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது. மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அச்சிறுமி தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய பிறகே அக்கும்பல் அவர்களை விடுவித்துள்ளது.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பீகாரின் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் கே.எஸ். அனுபம் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ்வை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவர் போலீசாருடன் மோதல்போக்கில் ஈடுபட்டதால் அவரை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின்போது மற்றொரு குற்றவாளியும் காயமடைந்த நிலையில், இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இந்த வழக்கில் ஏற்கனவே 3 மைனர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நந்தன் யாதவ் மற்றும் மற்றொரு குற்றவாளியையும் சேர்த்து இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள மீதமுள்ள இருவரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் பிஸ்வஜீத் தயால் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in