LATEST NEWS
“டேய் நீ என் பேரன் மாதிரி என்னை விட்ருடா” 65 வயது பாட்டியை சீரழித்த தவெக நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி..!!
சென்னை அசோக் நகரில் சாலையோர நடைபாதையில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியான ஆனந்த் (29) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில், அசோக் நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தை உடனடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து மேல் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
