CINEMA
“கடைசியில் உண்மையை சொல்லிட்டாரு..!” அனிருக்கு எப்படிப்பட்ட பெண் பிடிக்கும் தெரியுமா…? அவரே சொன்ன மாஸ் பதில்.. இணையத்தை அதிரவைக்கும் ராக்ஸ்டாரின் பேட்டி..!!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், ‘ஜனநாயகன்’, ‘ஜெயிலர் 2’ எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துத் தொடர் பிஸியாகப் பணியாற்றி வருகிறார். இதனிடையே, தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் அனிருத்திற்குத் திருமணம் நடைபெறப் போவதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இது தொடர்பாக அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “‘ஜீன்ஸ்’ திரைப்படத்தில் வரும் மதுமிதா போன்ற பெண்ணா, இல்லை வைஷாலி போன்ற பெண்ணா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அனிருத், “ஐஸ்வர்யா ராய்” என்று நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். இவரது இந்தச் சமயோசிதமான பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் சூழலில், காவ்யா மாறனுடனான திருமணம் குறித்த செய்திகளுக்குத் தரப்பிலிருந்து தெளிவான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையே உள்ளது.
