CINEMA
ஜேசன் சஞ்சய்க்கு ‘ஜன நாயகன்’ தந்த புது சிக்கல்… ஸ்தம்பித்த ‘சிக்மா’ புரமோஷன்..!!
ஜூலை 31-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பர மற்றும் புரமோஷன் பணிகள் இப்போது வரை தொடங்கப்படவில்லை. ‘ஜன நாயகன்’ திரைப்படம் திடீரென திரையரங்குகளில் வெளியானதே, ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகள் தாமதமானதற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ‘சிக்மா’ திரைப்படத்தை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் தற்போது முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜன நாயகன்’ படத்தின் எதிர்பாராத ரிலீஸால், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அவரது முதல் திரைப்படத்திற்கே இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
