CRIME
“ஆசிரியரா… அரக்கியா..?” 5 வயது சிறுவன் செய்த அந்த ஒரு தவறு.. ஆசிரியை கொடுத்த கொடூர தண்டனை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 5 வயது சிறுவன் வகுப்பறையில் டவுசரில் சிறுநீர் கழித்ததற்காக, அங்குள்ள ஆசிரியை அவனது பிறப்புறுப்பு பகுதியில் கத்தியைச் சூடு வைத்துக் காயப்படுத்தியதாகப் பெற்றோர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் அளித்துள்ளனர். வீட்டிற்கு வந்த குழந்தை வலியால் கதறி அழுததைக் கண்டு பதறிய பெற்றோர், உடனே குழந்தையைச் சோதித்த போதுதான் இந்த கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
இச்சம்பவம் குறித்து முறையிடுவதற்காகப் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் சென்றபோது, பள்ளி நிர்வாகம் அவர்களைப் புகாரளிக்க விடாமல் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெற்றோரின் புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் மிரட்டல் விடுத்த பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
