CRIME
“நல்லா வேணும்டா உனக்கு… பொண்ணுங்ககிட்ட வால் ஆட்டுனா இதுதான் நிலைமை…! பஸ்ஸை ஓரங்கட்டி வாலிபரை வெளுத்து வாங்கிய BMTC டிரைவர்..!!”
பெங்களூரு வெளிவட்டச் சாலை பகுதியில், ஹெப்பாலில் இருந்து மான்யதா டெக் பார்க் நோக்கிச் சென்ற BMTC பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக பேருந்து ஓட்டுநரிடம் புகார் அளித்தார். பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்த பேருந்து ஓட்டுநர் பிரவீன், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு உடனடியாகச் செயல்பட்டார்.
பேருந்தை நடுரோட்டிலேயே நிறுத்திய ஓட்டுநர் பிரவீன், அந்த இளம்பெண்ணுக்குச் சீண்டல் கொடுத்த நபரைப் பிடித்து வீதியிலேயே வைத்து வெளுத்து வாங்கித் தகுந்த பாடம் புகட்டினார். பின்னர் அந்த நபரைத் தப்பவிடாமல் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். ஓட்டுநரின் இந்தத் துணிச்சலான நடவடிக்கையைப் பயணிகள் அனைவரும் பாராட்டினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/HateDetectors/status/2080884697979380036/photo/1
